Friday, March 2, 2012

Las Vegas is "Loss Vegas"


எங்கள் கை மூட்டைகளோடு சேர்த்து; 
கனவு மூட்டைகளும் Continental-இல் பறந்து சென்றது.
தரை இறங்கியதும், சிலிர்த்து போனேன்.
இரவை அழகாக்க மனிதன் படைத்த -
 இரண்டாவது சொர்க்கம் அது. 
"Vegas"  ஒலி வெள்ளத்தில்  
தங்க மீன்களாய் மின்னினோம் 
தங்கம்;  தகரமாகப்  போவதை அறியவில்லை அப்போது.

பல சூதாட்டி சித்தர்களை உறுவாக்கிய பாவ நகரத்தில்,
நானும் சூதாடி பார்த்தேன்.
It's a Wheel of Misfortune...:-)
Roulette  ராகம் பாடியது   
காசை பிடுங்கி கொண்டு;
கருப்பு கோமாளி (black jack)  கன்னத்தில்  அறைந்தான்.
இருந்தும் மனம் தளரவில்லை,
மச்சி!!!!  கடசியா ஒரு 20 Dollar வச்சு பாதுருளா??
என்று என் மனசாட்சி,  சகுனி போல் பாவனை செய்தாலும் 
இனி பந்தயம் வைக்க துரவுபதி என்னிடம் இல்லை.

சூதாட்டம் சுதபிய பின் 
சுகம் தேட வழி சொன்ன கார் ஓடியீன் கை பிடித்து
மனசுக்குள் மத்தாப்போடு மசாஜ் parlour முன் நிற்க,
அவள் கை மட்டும் அமுக்கி 
காசு அனைத்தும் பிடுங்கி விட்டால் 
என்று நண்பன் சொன்ன கதை கேட்டு 
முதன் முதலாக  கற்பிழக்கும்; கனவிழந்தோம்! 
அச்சத்தில் எனக்கு கேந்திக்கு பதிலாக வாந்தி வந்தது .

பாவ நகரத்திலிருந்து பாவமாய் புறப்பட்டோம். 
துக்கம் தொண்டை அடைத்தாலும் 
என்ன மச்சி செமையா  Enjoy பண்ணியா ???
என்ற நண்பன் கேள்விக்கு 
புன்னகையுடன் ...." What Happens in Vegas stays in Vegas!!!"


1 comment:

  1. நல்ல கவிதை... நன்றாக தெரிகிறது 'Las Vegas' உனக்கு 'Loss Vegas' ஆகி போனது. :)
    நகரத்தின் கவர்ச்சி உன்னை நரகத்திற்கு இழுக்கும் சூழ்ச்சி.

    - Dhana

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.