Thursday, December 23, 2010

New York!!!

New York! New York! New York!
Born from the Dutch York and named after Duke York!
Six to the Bronx and bridge to the Brooklyn.
Go to the Empire and reach for the sky,
View from the Rockefeller, with a bite of Falafel;
Square your times in the crossroads of the world.
Near the WALL, people catch the bull’s BALL.
Liberty stands, with the green lady from France.
Watch for the Dow dances up and down on the floor
whatever happens money matters in the Wall
and honey spends it in the Mall !
Chinatown takes you Shanghais and Yellow taxi sings Bhalle! Bhalle!
Stop counting sheep, this city never sleeps!
Rock n Roll with black and blonde
Day or Night, this Big Apple glows in Light!
Not only for this 'century 21', She looks 'Forever 21'
New York! New York! New York!

Thursday, December 2, 2010

Night Club ...!

விளக்குகளில் மேடையிட்டு, மேடைக்கு நடுவே கோளிட்டு
அவள் மேலிருந்து கீழ் வந்தால்; அதை கண்டு 
நான்  கிழிருந்து மேல் சென்றேன்!
அங்கு  அம்பலமானது விக்டோரியாவின் ரகசியம்!
அப்பொழுது தான் புரிந்தது  ஆதாம் ஆப்பில் தின்ற அவசியம்!
குடி ஆட்டம் முடிந்து ; மடி ஆட்டம் போட
உள்ளே நுழைந்தால் அங்கே குண்டர்களின் எச்சரிகை!
அவள்  உன்னை தொட்டால் காசு அவளுக்கு,
நீ அவளை தொட்டால் காயம் உனக்கு ஜாக்கிரதை!
காசை கொடுத்து, கலாச்சாரத்தை விற்று
கண்ணிலிருந்த  காமம் வெளிவந்து கழிவானது!.

Saturday, November 20, 2010

என் முதல் காதல்

முக புத்தகத்தில் தவறாமல் status update போடும் எனக்கு,
 என் மன புத்தகத்தை திறந்து பார்க்க நேரம் கிடைத்தது
அதில் செல்லரித்து போன பல பக்கங்களுக்கு இடையில்
என்னை  புல்லரிக்கச்  செய்த   என் முதல் காதல்  பக்கங்கள்!

பெண்களிடம் நட்பாக மட்டும் பழகும் அளவிற்க்கு நான் அன்று பக்குவ  படவில்லை
அந்த பொய் நாகரிகத்தை என் மூளை  ஏற்று கொண்டது போல் நடித்தாலும்; என் இதயத்திற்கு  அதில் துளியும் உடன்பாடில்லை

கல்லூரியில் கணினி முன்னால் என் கனவோடு சேர்த்து
கடலைகளையும் compile  செய்து கொண்டிருந்த நேரம்
வானவில்லின் வண்ணம் ஒன்று பூமியில் தவறி விழுந்து பெண்ணாக மாறி போனது....
கோவையில் நான் பார்த்த முதல் பாவை....!
எனக்குள் கலவியை தூண்டிய கன்னிகளுக்கு இடையில்
முதல் முறை காதலை தூண்டியவள்;  கவிதையை தூண்டியவள்

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது; அன்று ஒரு நாள்
கண்ணதாசனை கல்லறையிலிருந்து எழுப்பி என்
காதலுக்காக கவிதை ஒன்று எழுத அவன்
பேனாவை இரவல் கேட்டேன் !

என் காதலை கவிதையாக சொல்ல நிதானமாக யோசித்து கொண்டிருந்தேன்; சட்டென்று சொல்லிவிட்டாள் அவள் காதலை இன்னொருவனிடம். கலங்கி போனேன்...

Free-ya உடு மச்சி இந்த பொண்ணுகளே  இப்படித்தா.
கருவிலேயே அழித்து விட்டேன் அந்த கல்லூரி காரியீன் காதலை
காதலை சொல்லவும் இல்லை
சொல்லாத காதலுக்கு தோல்வியும் இல்லை;   இருந்தும்
அந்த முதல் காதல்  என் மனதில் இன்னும் இடித்து கொண்டுதான் இருக்கிறது
அந்த இடிகள் என் கண்களில் கண்ணீர் மழையோடு சேர்த்து
கவிதை மழையையும்   பொழிந்து கொண்டு இருக்கிறது.