துட்டு கொடுத்து வாங்கில சுதந்திரம்
நோட்டு கட்டு கொடுத்து வாங்கில சுதந்திரம்
நாட்டு பற்று மிக்க வீரர் தம் உயிரை
விட்டு பெற்றது சுதந்திரம். அதை
வெட்டி அழிக்க சில ஊழல் வெறியர்; மதி
கெட்டு அழைகிறார் நம் நாட்டில்; அவரை
சுட்டு வீழ்த்தி, நம் சுதந்திரத்தை
எட்டு திசையிலும்;
மட்டு மதிப்புடன் காப்போம்
வந்தே மாதரம்!!!
வாழ்க பாரதம்!!!
ஜெய்ஹிந்த்!!!!!