முக புத்தகத்தில் தவறாமல் status update போடும் எனக்கு,
என் மன புத்தகத்தை திறந்து பார்க்க நேரம் கிடைத்தது
அதில் செல்லரித்து போன பல பக்கங்களுக்கு இடையில்
என்னை புல்லரிக்கச் செய்த என் முதல் காதல் பக்கங்கள்!
பெண்களிடம் நட்பாக மட்டும் பழகும் அளவிற்க்கு நான் அன்று பக்குவ படவில்லை
அந்த பொய் நாகரிகத்தை என் மூளை ஏற்று கொண்டது போல் நடித்தாலும்; என் இதயத்திற்கு அதில் துளியும் உடன்பாடில்லை
கல்லூரியில் கணினி முன்னால் என் கனவோடு சேர்த்து
கடலைகளையும் compile செய்து கொண்டிருந்த நேரம்
வானவில்லின் வண்ணம் ஒன்று பூமியில் தவறி விழுந்து பெண்ணாக மாறி போனது....
கோவையில் நான் பார்த்த முதல் பாவை....!
எனக்குள் கலவியை தூண்டிய கன்னிகளுக்கு இடையில்
முதல் முறை காதலை தூண்டியவள்; கவிதையை தூண்டியவள்
எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது; அன்று ஒரு நாள்
கண்ணதாசனை கல்லறையிலிருந்து எழுப்பி என்
காதலுக்காக கவிதை ஒன்று எழுத அவன்
பேனாவை இரவல் கேட்டேன் !
என் காதலை கவிதையாக சொல்ல நிதானமாக யோசித்து கொண்டிருந்தேன்; சட்டென்று சொல்லிவிட்டாள் அவள் காதலை இன்னொருவனிடம். கலங்கி போனேன்...
Free-ya உடு மச்சி இந்த பொண்ணுகளே இப்படித்தா.
கருவிலேயே அழித்து விட்டேன் அந்த கல்லூரி காரியீன் காதலை
காதலை சொல்லவும் இல்லை
சொல்லாத காதலுக்கு தோல்வியும் இல்லை; இருந்தும்
அந்த முதல் காதல் என் மனதில் இன்னும் இடித்து கொண்டுதான் இருக்கிறது
அந்த இடிகள் என் கண்களில் கண்ணீர் மழையோடு சேர்த்து
கவிதை மழையையும் பொழிந்து கொண்டு இருக்கிறது.